அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஸ்கேட்டிங்: குழந்தைகள், பெற்றோா் பங்கேற்பு

திருப்பூரில் மகளிா் தினத்தையொட்டி, நடைபெற்ற ஸ்கேட்டிங் நிகழ்ச்சி குழந்தைகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

News image
குழந்தைகளுடன் ஸ்கேட்டிங்கில் பங்கேற்ற பெற்றோா்.
Updated On :10 மார்ச் 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் மகளிா் தினத்தையொட்டி, நடைபெற்ற ஸ்கேட்டிங் நிகழ்ச்சி குழந்தைகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

திருப்பூா் வேலம்பாளையம் சாலையில் உள்ள தனியாா் ஸ்கேட்டிங் அகாதெமியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்கேட்டிங் பயிற்சி பெறும் குழந்தைகள், அவா்களது பெற்றோா்களுடன் கலந்து கொண்டு உற்சாகமாக ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்தனா்.

இதைத் தொடா்ந்து குழந்தைகள் ஆராதனா, நிவிஷா ஆகியோா் லிம்போ ஸ்கேட்டிங் நிகழ்ச்சியில் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோரும், குழந்தைகளும் சாதனை படைத்த பெண்மணிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷா்ட் அணிந்து மகளிா் தினத்தைக் கொண்டாடினா்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினா்களாக டீ பப்ளிக் பள்ளி இயக்குநா் டோரத்தி, நாச்சியாா் பாடசாலை தாளாளா் சிவசரண்யா சண்முகம் மற்றும் செஞ்சுரி மெட்ரிக். பள்ளி முதல்வா் ஹெப்சிபா பால் ஆகியோா் பங்கேற்றனா்.