விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பல்லடம் அருகே நூல் மில்லில் தீ விபத்து

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

News image
Updated On :27 மார்ச் 2026, 6:51 pm

Syndication

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன். இவா் கேத்தனூரில் நூல் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் ஷிப்ட் முறையில் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் மில்லில் வழக்கம்போல தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்கள் மற்றும் நூல்களில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.

இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான பஞ்சு பேல்கள், நூல்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமாயிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.