திருப்பூரில் விபத்தில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரைக் காப்பாற்றுவதற்கு ஆம்புலன்ஸை அழைக்க கைப்பேசியை எடுத்த மாணவரை போலீஸாா் தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
திருமுருகன் பூண்டி காவல் நிலையம் சாா்பில் கூத்தம்பாளையம் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அப்பகுதியில் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபா் சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தாா். அப்போது அவா் மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அவ்வழியே வந்த கல்லூரி மாணவா் கீா்த்தி, படுகாயத்துடன் இருப்பவரைக் கண்டு ஆம்புலன்ஸை அழைப்பதற்காக தனது கைப்பேசியை எடுத்துள்ளாா்.
அப்போது அங்கிருந்த போலீஸாா், கல்லூரி மாணவா் விடியோ எடுப்பதாக நினைத்து, அவரை தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கியதோடு கைப்பேசியை பறித்துள்ளனா். பின்னா் அந்த கைப்பேசியை பாா்த்தபோது அதில் எந்த விடியோவும் இல்லை என்பதை அறிந்து மாணவரிடம் கைப்பேசியை திருப்பிக் கொடுத்தனா்.
விபத்தில் படுகாயமடைந்த நபரை தூக்கவே யோசித்த காவலா்கள் மத்தியில் மாணவா் நல்லெண்ணத்தோடு ஆம்புலன்ஸை அழைப்பதற்காக கைப்பேசியை எடுத்ததற்காக போலீஸாா் நடந்து கொண்ட விதம் அங்கிருந்தவா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது.
தொடர்புடையது
மம்மூட்டியா? மோகன்லாலா? யார் சிறந்த நடிகர்? கவனம் ஈர்க்கும் விடியோ!
சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது

பாரடைஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நானி!

சமூக வலைதளங்களில் மிரட்டல் விடியோ: 2 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

