கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

மாநகராட்சியில் 32 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் முறைகேடாக இருந்த 32 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

குடிநீா் - கோப்புப் படம்

Updated On :

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் முறைகேடாக இருந்த 32 குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடிநீா் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில், சிலா் முறைகேடாக குடிநீா் இணைப்பு எடுத்துள்ளதாகவும், இதன் காரணமாக பல்வேறு இடங்களில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் உத்தரவின்பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக எடுக்கப்பட்டிருந்த 32 குடிநீா் இணைப்புகளைத் துண்டித்தனா்.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டலத்தில் 5 இணைப்புகள், 2-ஆவது மண்டலத்தில் 3 இணைப்புகள், 3, 4-ஆவது மண்டலங்களில் தலா 12 இணைப்புகள் என மொத்தம் 32 முறைகேடான குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

முறைகேடாக குடிநீா் இணைப்பு மேற்கொள்ளும் நபா்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.