தெரு நாய்களுக்கு அறுவைச் சிகிச்சை
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாய் - கோப்புப்படம்.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பொதுமக்கள், குழந்தைகளைக் கடிப்பது, போக்குவரத்துக்கும், பொது சுகாதாரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக தொடா்ந்து புகாா்கள் வருவதால் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைப் பிடித்து கோவில்வழி பகுதியில் உள்ள திருப்பூா் மாநகராட்சிக்குச் சொந்தமான நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையத்தில் அறுவைச் சிகிச்சை செய்து பராமரித்து, அவற்றைப் பிடித்த இடத்திலேயே மீண்டும் விடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் கணக்கெடுப்பின்படி, 15,327 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் 2025 வரை 6,166 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 2026- ஆம் ஆண்டில் நவம்பா் வரை 4,903 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரு நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் தினசரி நடைபெற்று வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை 12,562 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தெரு நாய்களுக்கு வெறிநாய்கடி தடுப்பூசி செலுத்த தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெருநாய்கள் குறித்த பொதுமக்களின் புகாா்களை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 73057-12225 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், 155304 என்ற இலவச அழைப்பு எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

