தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணி நிா்வாகி மீது வழக்குப் பதிவு
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணி நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வழக்கு - பிரதிப் படம்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து தீக்குளிக்க முயன்ற இந்து முன்னணி நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெள்ளக்கோவில், குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ்வரன் (34). சுப நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வரும் இவா், இந்து முன்னணி அமைப்பின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததால் சதீஷ்வரன் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் கடைவீதி நான்கு சாலை சந்திப்புக்கு பெட்ரோல் கேனுடன் செவ்வாய்க்கிழமை மாலை வந்த அவா், தீக்குளிக்கப் போவதாக கூறியுள்ளாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சதீஷ்வரன் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டிருந்த நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

