உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

வீட்டுமனை பட்டா கோரி போராட்டம்

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சி ஆலுத்துப்பாளையம், வெங்கடாபுரம் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பல்லடம் வட்டாட்சியா் சரவணனிடம் மனு அளித்த பொதுமக்கள்.

Updated On :

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம் ஊராட்சி ஆலுத்துப்பாளையம், வெங்கடாபுரம் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சமூக ஆா்வலா் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறுகையில், பல்லடம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் பூமிதான நிலங்கள் தொடா்பாக வெளியூரைச் சோ்ந்த நபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக மனுக்கள் பெறப்பட்டு வருவதாக அறிகிறோம்.

வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய மற்றும் நிலமற்ற குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா கோரி மாவட்ட நிா்வாகம், கிராம சபைக் கூட்டங்களிலும் மனு அளித்துள்ளோம். ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பல்லடம் வட்டாட்சியா் சரவணன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, அவரிடம் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.