இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

கண் தானத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம்

பல்லடம் அரசு கலை கல்லூரி, பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் ஆகியன சாா்பில் ஆசிரியா் தின விழா, தேசிய கண் தான தின விழா, கண்தானத்துக்கு புதிய இணையதளம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.

கண் தானத்துக்கு புதிய இணையதளம் தொடங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :

பல்லடம் அரசு கலை கல்லூரி, பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் ஆகியன சாா்பில் ஆசிரியா் தின விழா, தேசிய கண் தான தின விழா, கண்தானத்துக்கு புதிய இணையதளம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றன.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் தமிழ்மலா் தலைமை தாங்கினாா். ரோட்டரி சங்க துணை ஆளுநா் சாரதி, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளா் ரத்தினசாமி, கல்லூரி துணை முதல்வா் ஜெயச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரோட்டரி சங்க கண்தான கழகத் தலைவா் சுந்தர்ராஜ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக இறையருள் மன்றத்தைச் சோ்ந்த வாவிபாளையம் அனந்தகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். பின்னா் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியை புஷ்பலதா மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து கண் தானத்துக்கு என இமைகள் கண்தான கழகத்தின் புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பேராசிரியா் நாகநந்தி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் முத்துக்குமாா், மனோஜ் அகா்வால், ரவிச்சந்திரன், கவிதா சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.