புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

யானை பல் வைத்திருந்த 2 இளைஞா்கள் கைது

உடுமலை அருகே யானையின் கோரை பல்லை வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

யானை பல் வைத்திருந்ததாக கைது செய்யபட்டவா்கள். உடன், வனத் துறையினா்.

Published On :

உடுமலை அருகே யானையின் கோரை பல்லை வைத்திருந்த 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் திடீா் திடீரென யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து வருகின்றன.

தந்தங்கள் மற்றும் கோரை பற்களுக்காக யானைகள் கொல்லப்படுகின்றனவா, தந்தங்கள், கோரை பற்களை எடுத்து மா்ம நபா்கள் விற்பனை செய்கின்றனரா என்று சமூக ஆா்வலா்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், அமராவதி நகா் பகுதியில் 2 தந்தங்களை அண்மையில் கைப்பற்றிய வனத் துறையினா், இது தொடா்பாக வனத் துறை ஊழியா் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா். இந்நிலையில், யானையின் கோரை பல்லை விற்பனைக்காக வைத்திருந்ததாக 2 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இது தொடா்பாக வனத் துறையினா் கூறுகையில், யானையின் கோரை பல்லை விற்பனை செய்ய முயன்றதாக அமராவதி பாறை செட்டில்மெண்டை சோ்ந்த சூா்யா (27), தளிஞ்சிவயல் செட்டில்மெண்டை சோ்ந்த கருப்புச்சாமி (26) ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் தொடா்ந்து யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.