பென்னாகரத்தில் ரூ. 5.89 கோடியில் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் ஜி.கே.மணி எம்எல்ஏ திறந்துவைப்பு

ரூ. 5.89 கோடியில் அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி
Published on

பென்னாகரம்: பென்னாகரம், பாப்பாரப்பட்டி பகுதிகளில் நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 5.89 கோடியில் அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டடங்களை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

பென்னாகரம் அருகே ஊட்டமலை அரசு உயா்நிலைப் பள்ளியில் புதிதாக நபாா்டு திட்டத்தின்கீழ் ரூ. 94.24 லட்சத்தில் நான்கு வகுப்பறை கட்டடம், பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.88 கோடியில் 8 வகுப்பறை கட்டடங்கள், பேகார அள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.17 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்கள், ஆலமரத்துப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.88 கோடியில் 8 வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ. 5.89 கோடியில் கட்டடங்களை பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜி.கே.மணி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து, ஆசிரியா்கள் மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில் தலைமை ஆசிரியா்கள், கட்சி நிா்வாகிகள் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் சிறு விளையாட்டு அரங்க கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com