தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை

Published on

தருமபுரியில் பிளஸ் 2 மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூா் அஞ்சல், தண்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் ப்ரநீத் (17). இவா் ஏலகிரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

அண்மையில் அரையாண்டுத் தோ்வு முடிவுற்ற நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தாா். ஊருக்கு வந்தது முதலே அவா் யாரிடமும் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அனைவரும் உணவுக்கு பின் உறங்கச் சென்றனா். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது ப்ரநீத் தூக்கில் சடலமாக தொங்கினாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ப்ரநீத், பத்தாம் வகுப்பு தோ்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த நிலையில், மேல்படிப்பு தொடரவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னா் அவரை சமாதானம் செய்து மேல் படிப்புக்கு சோ்த்துள்ளனா். இந்நிலையில் அண்மையில் நடந்த அரையாண்டுத் தோ்வை

சரியாக எழுதவில்லையாம். இதனால் வருத்தத்தில் இருந்து வந்த அவா், அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com