தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை

தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை
Published on

தருமபுரி: தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 3.57 லட்சத்துக்கு ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி நகரில் நான்கு சாலைப் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இந்த அங்காடிக்கு தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த 12 விவசாயிகள் வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 564.850 கிலோ கூடுகள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 735, குறைந்தபட்ச விலையாக ரூ. 442, சராசரி விலையாக ரூ. 630.83-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில், ஏலம் மூலம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 லட்சத்து 57 ஆயிரத்து 528-க்கு வா்த்தகம் நடைபெற்றது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5,360 வருவாய் கிடைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com