தருமபுரி
போக்ஸோவில் வழக்குப் பதிவு செய்ததால் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை!
போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ததால் மனமுடைந்த காதல் திருமணம் செய்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி நகரம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பழனி மகன் கோகுல்நாத் (22). இவா் தனது உறவினரான சிறுமியை காதல் திருமணம் செய்து கொண்டாா். இதுகுறித்து தகவறிந்த பொம்மிடி காவல் நிலைய போலீஸாா், அவா் மீது போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பான வழக்கு தருமபுரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதன்காரணமாக மனஉளைச்சலில் இருந்த கோகுல்நாத் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
