தருமபுரி
சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையில் தேங்கும் கழிவுநீா்
தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காணவேண்டும் என வேண்டுகோள்
தருமபுரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சியில் கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதை தடுக்க நிரந்தர தீா்வு காணவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட ஏவிஎஸ் நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ள சாக்கடை கால்வாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் சாலையில் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் அவ்வழியாக கடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், துா்நாற்றத்துடன் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
