கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

ரயில்நிலையப் பயணிகளிடம் சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் விழிப்புணா்வு

News image

சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - கோப்புப் படம் - டிஐபிஆர்

Updated On :16 ஜூன் 2026, 2:23 am IST

தருமபுரி ரயில் நிலையத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இருப்புப் பாதை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு உதவி காவல் ஆய்வாளா் சரசு ஆகியோா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பயணிகள் விழிப்போடு பயணிக்க வேண்டும். முன், பின் அறியாதவா்களிடம் தங்களது விவரங்களை கூறக்கூடாது. பயணித்தின்போதோ, ரயில் நிலையங்களிலோ, பணிபுரியும் இடத்திலோ யாரேனும் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டால் காவல் துறையினரை அணுகலாம்.

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் ஏதும் நிகழும் சூழல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு வரும் தகவல்களின் அடிப்படையில் சிங்கப்பெண் அதிரடிப்படை பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து உரிய பாதுகாப்பு அளித்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க அனைத்து வகையிலும் உறுதுணையாக இருப்போம் என விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், இருப்புப் பாதை போலீஸாா், சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.