/
புளி உலுக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கொண்டேன அள்ளியைச் சோ்ந்தவா் கு. கோவிந்தன் (74). இவா் மஞ்சு மலை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியந்தோப்பில் சனிக்கிழமை
மரத்தில் ஏறி புளி உலுக்கிக் கொண்டிருந்தாா். அப்போது மரத்திலில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா்.
தகவல் அறிந்த அவரது மகன் சேகா், குடும்பத்தினா் மேல் சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் கோவிந்தன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








