கீரைப்பட்டி வழியாக அம்மாபேட்டைக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.


கீரைப்பட்டி வழியாக பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து டி.அம்மாபேட்டைக்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி கிராம ஊராட்சியில் 63 மலை கிராமங்கள்உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் பழங்குடியினர். சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி உள்ளிட்ட மலை
கிராம மக்கள் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், உதவித் தொடக்க கல்வி அலுவலகம், சார்- பதிவாளர் அலுவலகம், சார்நிலை கருவூலம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலக பணிகள் தொடர்பாகவும் பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல், வாச்சாத்தி, டி.புதூர், பேதாதம்பட்டி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட கிராம மக்களும் வருவாய்த் துறை சார்ந்த பணிகளுக்கு பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டியுள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் அரூர் நகருக்கு வந்து, அதன்பிறகு பாப்பிரெட்டிப்பட்டி செல்ல வேண்டும். இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வீணாக சுற்றிச் செல்லும் நிலையுள்ளது.
சித்தேரி பகுதி மக்கள் எளிதாக பாப்பிரெட்டிப்பட்டி செல்வதற்கு பேருந்து வசதிகள் இல்லை. இதேபோல், இங்குள்ள விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட விவசாய விளைபொருள்களை கோபிநாதம்பட்டி கூட்டுசாலையில் உள்ள விற்பனை மையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால் மலைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, புதன் சந்தை, தீர்த்தமலை, டி.அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்ல பேருந்துகள் இல்லை. எனவே, மலை கிராம மக்கள் நகர் பகுதிகளுக்கு சென்றுவரும் வகையில் புதிய வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க வேண்டும்.
அதாவது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து அ.பள்ளிப்பட்டி, கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, கோ.கூட்டுரோடு, வாச்சாத்தி, பேதாதம்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, முத்தானூர், ஈட்டியம்பட்டி, கூடலூர், பொய்யப்பட்டி, தீர்த்தமலை, டி.ஆண்டியூர் வழியாக டி.அம்மாபேட்டைக்கு செல்லும் வகையில் புதியதாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...