டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பொறியியல் கலந்தாய்வுக்கு அரசுக் கல்லூரிகளின் சேவை மையங்களையே அணுகுங்கள்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாநிலம் முழுவதும் 42 அரசுக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களை

Updated On :23 ஜூலை 2018, 9:26 am IST

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாநிலம் முழுவதும் 42 அரசுக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களை மட்டுமே மாணவர்கள் அணுக வேண்டும் என மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவுரை வழங்கியுள்ளார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கல்லூரிகளுக்கான இணையதளம் மூலமான கலந்தாய்வு வரும் ஜூலை 25ஆம் தேதி தொடங்கி, ஆக. 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  5 கட்டங்களாக நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், ஒவ்வொரு கட்டத்திலும் முதல் 5 நாட்கள் மாணவர்கள் கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்யலாம்.
190 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதல் கட்டத்திலும், 175 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்திலும்,  150 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு மூன்றாம் கட்டத்திலும், 125 கட்ஆப் மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு 4ஆம் கட்டத்திலும், 125 கட்ஆப் மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்களுக்கு 5ம் கட்டத்திலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வுக்காக மாநிலம் முழுவதும் உள்ள 42 அரசுக் கல்லூரிகளில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  உயர்கல்வித் துறையால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இவற்றில் இருப்பர்.  மாணவர்கள் தேவையான அத்தனை உதவிகளும் இச் சேவை மையங்களில் வழங்கப்படும்.  ஆலோசனைகளும் வழங்கப்படும். 
எனவே,  மாணவர்கள் இச் சேவை மையங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  தனியார் மையங்களுக்குச் சென்று குழம்பிக் கொள்ள வேண்டாம்.  பதிவு செய்த பிறகு,  வீட்டிலிருந்தபடியே தங்களுக்கான ஒதுக்கீட்டைத் தெரிந்து கொண்டு,  வீட்டிலுள்ளவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
கலந்தாய்வுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 1000 கட்டணமாகவும்,  மற்ற பிரிவினருக்கு ரூ. 5000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய அரசுப் பொறியியல் கல்லூரிகளில் தலா 240 புதிய இடங்கள் வீதம் 720 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கல்லூரிக் கட்டணங்களைப் பொருத்தவரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்தால்,  தயங்காமல் நடவடிக்கை எடுப்போம் என்றார் அன்பழகன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.