
விநாயகர் சதுர்த்தியையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் 792 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.
இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. வீடுகள்தோறும் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை, கொண்டைக்கடலை படையலிட்டு சதுர்த்தியை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு சில நாள்கள் கழித்து அவற்றை நீர்நிலைகளில் கரைப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல நிகழாண்டிலும் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாட பொதுமக்கள் புதன்கிழமை மாலையே தயாராகினர். வணிக மற்றும் கல்வி நிறுவனங்களில் புதன்கிழமையே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் சதுர்த்திக்கு தேவையான பொருள்களை புதன்கிழமை இரவே வாங்கினர்.
மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 792 விநாயகர் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக மாவட்டக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை உயரலாம் என்றும் தெரிகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
சிலைகளை கரைப்பதற்கு ஒகேனக்கல் காவிரியாறு, வாணியாறு, ஈச்சம்பாடி அணை, இருமத்தூர் தென்பெண்ணை ஆறு, கேசர்குலி அணை, வரட்டாறு ஆகிய இடங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலகின் மிக வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்

37 ஆண்டுகளுக்குப் பிறகு! மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்த கர்நாடக அரசு உத்தரவு!




