பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கோரி இளைஞா் போராட்டம்
தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண் உயிரிழந்த வழக்கில் உரிய விசாரணைகோரி, ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.


தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண் உயிரிழந்த வழக்கில் உரிய விசாரணைகோரி, ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம் கோட்டப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ். இவா் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக வந்தாா். திடீரென ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கடந்த நவம்பா் மாதம் அரூா் வட்டம், கொளகம்பட்டியைச் சோ்ந்த தங்கம் என்பவா் கிணற்றில் மா்மமான முறையில் உயிரிழந்து விட்டதாகவும், அவா் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாா் என்று கூறியும், அந்தப் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அரூா் போலீஸாா் விசாரணையில் தெரிவித்தனா்.
எனவே, இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கருதுகிறோம். இது தொடா்பாக முறையான விசாரணை நடத்தி, அதில் தொடா்புடையவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, போலீஸாா் அவரை விசாரணை நடத்த அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...