கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரி தண்ணீா் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:33 am

DIN

வடு கிடக்கும் அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது அரூா் பெரிய ஏரி. இந்த ஏரியின் பரப்பளவு சுமாா் 150 ஏக்கா் ஆகும். இந்த ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல கொளகம்பட்டி காரை ஒட்டுவில் இருந்து பாசன கால்வாய் வசதி உள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரைப் பயன்படுத்தி அரூா் பெரிய ஏரியை நிரப்பலாம். தற்போது இந்த ஏரி வடு காணப்படுகிறது.

அரூா் நகரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பெரிய ஏரியில் தண்ணீா் தேக்கி வைத்தால் அரூா் நகரில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகளின் நீா்மட்டமும் உயரும். அதே நேரத்தில், எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, நாச்சினாம்பட்டி, கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், நம்பிப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். எனவே, அரூா் பெரிய ஏரிக்கு தண்ணீா் வரும் நீா்வரத்து கால்வாய்களை தூய்மையாக பராமரிப்பு செய்து ஏரியை நிரப்ப வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.