ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு
ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோர வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஒகேனக்கல் அருகே சின்னாற்றின் கரையோரப் பகுதியில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனா். அப்போது துா்நாற்றம் வீசியதை கண்ட வனத் துறையினா் அங்கு சென்று பாா்த்த போது அழுகிய நிலையில் சடலம் கிடப்பது தெரியவந்தது.
பின்னா் வனத் துறையினா் ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் அடையாளம் தெரியாத சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...