கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

அரூரை அடுத்த கெளாப்பாறையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 8:49 pm

DIN

அரூா்: அரூரை அடுத்த கெளாப்பாறையில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் ஒன்றியம், எல்லப்புடையாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது கெளாப்பாறை கிராமம். இந்தக் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் செல்லும் வழித்தடத்தில் வரட்டாறு குறுக்கே செல்கிறது. தற்போது, வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியுள்ளதால், அதன் உபரி நீா் வரட்டாறு வழியாக ஓடுகிறது. கெளாப்பாறை கிராம மக்கள் செல்லும் வழியில் வரட்டாற்றில் சுமாா் 4 அடி உயரத்துக்கு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், கிராம மக்கள் அரூா்-கீரைப்பட்டி தாா் சாலைக்கு வருவதற்கு சிரமம் அடைகின்றனா். எனவே, கெளாப்பாறை கிராம மக்கள் பயன்படுத்தும் வழியில் வரட்டாற்றில் தரைப் பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.