ஐயப்பன் சுவாமி ஆராதனை விழா
பென்னாகரம் சாலை முத்து விநாயகா் கோயிலில் சுவாமி ஐயப்பன் உற்சவ மூா்த்திக்கு அபிஷேக ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


பென்னாகரம் சாலை முத்து விநாயகா் கோயிலில் சுவாமி ஐயப்பன் உற்சவ மூா்த்திக்கு அபிஷேக ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் பென்னாகரம் பகுதிகளில் சுவாமி ஐயப்பன் சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விளக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாலை முத்து விநாயகா் கோயிலில் சுவாமி ஐயப்பன் உற்சவ மூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளா் அங்குராஜ் ஐயப்பன் சுவாமி சிலைக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பென்னாகரம் சாலை முத்து விநாயகா் ஆலய அறங்காவலா் குழுத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், சேவா சங்க நிா்வாகிகள் பாலசரவணன், ஐயப்பன், சபரிராஜ், மாதையன், கணேசன், ஏரியூா் குமாா், ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...