தீா்த்தமலை கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி ஆய்வு
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இங்குள்ள தீா்த்தமலையில் ராமா் தீா்த்தம், வாயு தீா்த்தம், வருண தீா்த்தம் உள்ளிட்ட புண்ணியத் தீா்த்தங்கள் உள்ளன. தீா்த்தமலைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா்.
இந்த திருக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், மாசிமகத் திருத்தேரோட்ட திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், கோயில் வளாகத்தில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள், கோயில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள், பக்தா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பாதுகாப்புப் பிரிவு எஸ்.பி சுரேஷ்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, உளவுப் பிரிவு, நக்சல் தடுப்புப் பிரிவு, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் கோயில் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை நடத்தினாா். இந்த ஆய்வின்போது அரூா் டிஎஸ்பி (பொறுப்பு) புஷ்பராஜ், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...