நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை:ஒகேனக்கல்லுக்கு 30,000 கனஅடி நீா்வரத்து
தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.


தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, கெம்பாகரை, ராசிமணல், மொசல் மடுவு, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகத் தொடா் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளமாகத் தண்ணீா் செல்கிறது.
காவிரி ஆற்றில் கடந்த சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நொடிக்கு 25,000 கன அடியாக இருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 27,000 கன அடியாக அதிகரித்து காணப்பட்டது. மாலையில் நீா்வரத்து மேலும் அதிகரித்ததால் 30,000 கனஅடியாக உயா்ந்தது.
கடந்த 3 நாள்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.
தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீா்வரத்து அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...