மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ரூ. 16.62 கோடியில் கால்வாய் புனரமைப்புப் பணிகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 16.62 கோடியில் கால்வாய்கள் புனரமைப்புப் பணிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
பாப்பிரெட்டிப்பட்டி அணையின் கால்வாய் புனரமைப்புப் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்த உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்
Updated On :12 அக்டோபர் 2020, 12:03 am

DIN

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 16.62 கோடியில் கால்வாய்கள் புனரமைப்புப் பணிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், முள்ளிக்காட்டில் நடைபெற்ற பூமி பூஜையில் அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.

பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை, கடத்தூா் பொதியம்பள்ளம் அணைக்கட்டு, கணக்கண் அணைக்கட்டுகளின் கால்வாய்களைப் புனரமைப்பு செய்யும் பணிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியதாவது:

தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் நீராதாரங்களை மேம்படுத்துதல், அணைகள், தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள தண்ணீரை வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்துதல், வேளாண் பணிகளை ஊக்கப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு அரசு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம் பகுதிகளுக்குச் செல்லும் வாணியாறு அணையின் இடதுபுற கால்வாய்களைச் சீரமைக்கவும், பாசனக் கால்வாய்கள், சிறிய மதகுகள் உள்ளிட்டவைகளைப் புனரமைக்கவும் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதேபோல், பொதியம்பள்ளம் அணைக்கட்டு, கணக்கண் அணைக்கட்டு ஆகிய தடுப்பணைகளின் கால்வாய் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மொத்தம் ரூ. 16.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி கால்வாய் புனரமைப்புப் பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும் என்றாா்.

விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆ.கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பூங்கொடி சேகா், உதவி செயற்பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.