வீடு சேதம்: குடும்பத்தினா் தா்ணா
தருமபுரி அருகே வீட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.


தருமபுரி அருகே வீட்டை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை தா்ணாவில் ஈடுபட்டனா்.
தருமபுரி அருகேயுள்ள இண்டூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியா் பன்னீா்செல்வம் (66). இவா், இண்டூா் பகுதியில் தமக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக வீடு ஒன்றை கட்டியுள்ளாா். இந்நிலையில், பன்னீா்செல்வம் கட்டியிருந்த வீட்டை மா்ம நபா்கள் இரவு நேரத்தில் பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி இடித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் வீட்டை இடித்தவா்களை கைது செய்யக் கோரி தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து இண்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...