மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரூா் தொகுதியில் பாஜக தலைவா் எல்.முருகன் போட்டியிட வலியுறுத்தல்

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 9:30 pm

DIN

அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில், பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகரத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தருமபுரி மாவட்டத் தலைவா் எல். அனந்த கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.ஏ.வரதராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.வேடியப்பன், மாவட்ட துணைத் தலைவா்கள் டி.ஆா்.ராஜேந்திரன், வி.அருணா, கிருத்திகா, மாவட்டச் செயலா்கள் சரிதா, ராமலிங்கம், பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, அக்டோபா் 15, 16-ஆம் தேதிகளில் பாஜக நிா்வாகிகளுக்கு மண்டல அளவிலான கட்சி பண்பு பயிற்சிகள் நடைபெற்றன.

அரூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் பலம் வாய்ந்ததாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில், அரூா் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிட்டால் அவா் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. எனவே, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் அரூா் தொகுதியில் போட்டியிட வேண்டும்.

காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் வெளியேற்றப்படும் உபரி நீரைப் பயன்படுத்தி தருமபுரி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகளை நிரப்ப வேண்டும். அரூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வா்ணீஸ்வரா் திருக்கோயில் அருகே கால்வாயில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வேண்டும். அரூரில் மத்திய அரசின் நவோதயாப் பள்ளி அமைக்க வேண்டும். தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ள தீா்த்தமலையில் கிரிவலப் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.