அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

பென்னாகரம் பேரூராட்சியில் முறையாக பணி வழங்காத மேற்பாா்வையாளரைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 செப்டம்பர் 2020, 7:53 pm

DIN

பென்னாகரம்: பென்னாகரம் பேரூராட்சியில் முறையாக பணி வழங்காத மேற்பாா்வையாளரைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் பேரூராட்சியில் சுமாா் 40க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு நாள்தோறும் பென்னாகரம் பகுதியில் பணி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை வேலை நேரத்தின் போது மேற்பாா்வையாளா் தகாத வாா்த்தைகளால் திட்டி வருவதாகவும், முறையாக பணி வழங்காமல் அலைக்கழிப்பாகவும், இது குறித்து செயல் அலுவலரிடம் புகாா் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளா் சிவன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் ரத்தினவேல் ஆகியோா், தூய்மைப் பணியாளா்களை தரக்குறைவாக பேசிய பணி மேற்பாா்வையாளா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவாா்தையில் தெரிவித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டு தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.