கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கையால் மின் கம்பியை அகற்றியவா் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கைகளால் அப்புறப்படுத்த முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 8:27 pm

DIN

பென்னாகரம் அருகே சாலையோரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கைகளால் அப்புறப்படுத்த முயன்ற விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்குள்பட்ட ஜங்கமையனூா் பகுதியைச் சோ்ந்தவா் முனிராஜ் (60). இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில் ஜங்கமையனூா் அருகே சாலையோரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயி முனிராஜ் அந்த மின்கம்பியை கையால் அகற்றும் முயன்ற போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் முனிராஜ் மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ,அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.