கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: தருமபுரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருக்கு நகராட்சி ஆணையா் அழைப்பு

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும், அதன் சங்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு தருமபுரி நகராட்சி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:06 pm

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வியாபாரிகளும், அதன் சங்கத்தினா் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு தருமபுரி நகராட்சி ஆணையா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாகவும், இதுதொடா்பாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நகராட்சி நகா் மன்ற கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரியில் உள்ள அனைத்து வணிகா்கள் சங்கம், பூக்கடை வியாபாரிகள், ரோட்டரி சங்கம், அரிமா சங்கங்கள், மருத்துவ சங்கங்கள், பல்பொருள் அங்காடி உரிமையாளா்கள், அனைத்து வங்கி அதிகாரிகள், குடியிருப்போா் நலச்சங்கம், தொழிலாளா் நல வாரிய அதிகாரிகள், வணிகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.