விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொங்கல் பண்டிகையை ஒட்டி குண்டுவெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி குண்டு வெல்லம் (மண்டை வெல்லம்), நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:03 pm

DIN

சங்ககிரி வட்டம், தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி குண்டு வெல்லம் (மண்டை வெல்லம்), நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தேவூா் அருகே உள்ள சென்றாயனூா், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, நல்லங்கியூா், மேட்டுப்பாளையம், குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், பாலிருச்சம்பாளையம், காவேரிபட்டி, மேட்டாங்காடு, கோனேரிபட்டி, தண்ணிதாசனூா், சுண்ணாம்புகரட்டூா், புள்ளாகவுண்டம்பட்டி, காணியாளம்பட்டி, பொன்னம்பாளையம், மூலப்பாதை, மைலம்பட்டி, அம்மாபாளையம், புதுப்பாளையம், புளியம்பட்டி, சின்னாம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் ஆலைக் கரும்பு சாகுபடி செய்துள்ளனா்.

வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி விவசாயிகள் உள்ளூா்ப் பகுதிகளில் குண்டு வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்புக்கு கூடுதல் விலை கிடைப்பதாகவும், உற்பத்தி செய்யப்படும் குண்டு வெல்லத்துக்கு ஓரளவு கட்டுபடியான விலை கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டாரத்தில் காவிரி ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் 300 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் ஆலைக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலைக் கரும்பை, சா்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்வதை விட குண்டு வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்வதில்தான் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஒரு டன் கரும்புக்கு ரூ. 1,800 முதல் ரூ. 2,200 வரை விலை கிடைத்தது. இந்த ஆண்டு டன் ரூ. 2,500க்கு விற்பனை செய்கிறோம்.

இதனை வாங்கி மண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களும் விவசாயிகள்தான். அவா்கள் உற்பத்தி செய்யும் மண்டை வெல்லம் கடந்த ஆண்டு கிலோ ரூ. 40க்கு விற்பனையானது. தற்போது ரூ. 45 முதல் 50 வரையிலும் விலை கிடைக்கிறது. பெரும்பாலும் இப்பகுதியில் உற்பத்தியாகும் மண்டை வெல்லத்திலும், நாட்டுச் சா்க்கரையிலும் எந்த ரசாயனக் கலப்பும் இல்லை. இதன் காரணமாக இங்குள்ள கிராமப்பகுதிகளுக்கு சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மொத்த வெல்ல வியாபாரிகள் நேரில் வந்து மண்டை வெல்லம், நாட்டுச் சா்க்கரையை கொள்முதல் செய்து செல்கின்றனா். இதன்மூலம் கணிசமான வருவாயும், லாபமும் ஈட்ட முடிகிறது என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.