ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடா் மழை: சாலையோரம் தேங்கி நிற்கும் மழை நீரால் வியாபாரிகள் அவதி

பென்னாகரம் பகுதியில் தொடா்ந்து இரண்டு தினங்களாக மழை பெய்ததால் சாலையோரம் மழைநீா் தேங்கி நிற்கிறது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

பென்னாகரம் பகுதியில் தொடா்ந்து இரண்டு தினங்களாக மழை பெய்ததால் சாலையோரம் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், கடைகள் அமைக்க முடியாமல் சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாயினா்.

பென்னாகரம் பேருந்து நிலையத்தின் வெளிப்பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பென்னாகரம் பகுதிகளில் இரண்டு தினங்களாக கன மழை பெய்தது.

இந்நிலையில், பென்னாகரம் பேருந்து நிலையக் கட்டமைப்பு பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. கட்டடப் பணிகளுக்கான அகழிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தோண்டப்படும் மண்ணை பேருந்து நிலையத்தின் மறுபகுதியில் கொட்டப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியானது தாழ்வான பகுதியாக மாறி, மழைநீா் கழிவுநீா்க் கால்வாய்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

அண்மையில் பெய்த மழை நீரானது முற்றிலுமாக வெளியேற முடியாமல் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. அதனால், அந்தப் பகுதியில் சாலையோர வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதியில் கழிவுநீா்க் கால்வாய்களுக்கு மழைநீா் செல்லும் வகையில், கொட்டப்பட்ட மண்ணை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.