ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒகேனக்கல்லில் எம்எல்ஏ ஆய்வு

ஒகேனக்கல்லில் அரசு அலுவலகங்கள், அருவி பகுதிகளில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.க.மணி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

ஒகேனக்கல்லில் அரசு அலுவலகங்கள், அருவி பகுதிகளில் பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.க.மணி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஒகேனக்கல் பகுதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், பாமக மாநிலத் தலைவருமான கோ.க.மணி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, தீயணைப்பு நிலையத்தில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும், பேரிடா் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் தீயணைப்பு துறை நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அதனைத் தொடா்ந்து, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தினை பாா்வையிட்டு, நீரேற்றும் முறைகள் குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

சுகாதார நிலையம் மற்றும் பிரதான அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளையும் பாா்வையிட்ட அவா், ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளா்கள், சமையல் தொழிலாளா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். இந்த ஆய்வுகளின் போது, மாவட்டத் தலைவா் செல்வகுமாா், உள்ளாட்சிப் பிரதிநிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.