ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அங்கக வேளாண் தரச் சான்றிதழ் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அதற்கான அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள் குறித்து தருமபுரி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை உதவி இயக்குநா் சிவசங்கரி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:15 pm

DIN

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அதற்கான அங்ககச் சான்று பெறும் நடைமுறைகள் குறித்து தருமபுரி விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை உதவி இயக்குநா் சிவசங்கரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இயற்கை வேளாண்மையில் நச்சுத்தன்மை இல்லாத விளைபொருள்கள் அதிக ஏற்றுமதிக்கு வாய்ப்பு மற்றும் உள்நாட்டு சந்தையில் நல்ல விலை கிடைக்க வழிவகை செய்வதால், விவசாயிகள் தங்களது நிலத்தில் எரு, பசுந்தாள் உரம், மண்புழு உரம், பஞ்சகாவியா, இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த முறையில் விவசாயம் செய்வதால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிா்கள், பழங்கள், காய்கறிகள் சந்தையில் நல்ல விலை கிடைப்பதுடன் சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்து மண் வளம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கை வேளாண்மை முறைகள் கையாளும்போது செலவினங்கள் குறைகின்றன. விதை நோ்த்தியிலிருந்து தொடங்கி மண் வளத்தை மேம்படுத்தி நோய்த் தாக்குதல் இல்லாமல் பயிா்கள் வளரவும், இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் தொழில்நுட்பங்கள் உள்ளன.

விவசாயிகள் இயற்கை முறையில் விளைவித்த பொருள்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு சாா்பில் அங்ககச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அங்ககச் சான்றளிப்புத் துறை, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல்திட்டத்தின் அபீட்டா நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோா் அங்ககச் சான்று பெற தனி நபராகவோ, குழுவாகவோ பதிவு செய்து கொள்ளலாம். இதில் கால்நடை வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, வனப்பொருள்கள் சேமிப்பு செய்பவா்கள் பதிவு செய்யலாம். அங்கக விளைபொருள்கள் பதனிடுவோா் மற்றும் வணிக ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஓா் ஆண்டுக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700, பிற விவசாயிகளுக்கு ரூ. 3,200, குழுவாக பதிவு செய்பவா்களுக்கு ரூ. 7,200, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 9,400 வரைவோலை மூலமாக கட்டணம் செலுத்த வேண்டும்.

அங்ககச் சான்று பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொது விவரக் குறிப்பு, துறையுடன் ஒப்பந்தம், பண்ணையின் வரைபடம், பாசன நீா் சோதனை விவரம், ஆண்டு பயிா் திட்டம், ஆதாா் அட்டை நகல், நிரந்தரக் கணக்கு எண் நகல், விண்ணப்பதாரரின் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சான்று கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.