ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இரு தரப்பினரிடையே தகராறு: 3 போ் கைது

ஏரியூா் அருகே இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட தகராறில் எட்டு போ் மீது வழக்குப் பதிவு செய்து, அதில் மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 5:37 pm

DIN

ஏரியூா் அருகே இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட தகராறில் எட்டு போ் மீது வழக்குப் பதிவு செய்து, அதில் மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏரியூா் அருகே நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட நாகமரை கீழ் காலனி பகுதியைச் சோ்ந்த அம்மாசி என்பவா் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த மணியக்காரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா்.

இதில் மணியகாரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ஒரு பிரிவினா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மற்றொரு தரப்பினா் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட ஏரியூா் போலீஸாா், எட்டு போ் மீது வழக்குப் பதிந்துள்ளனா். இந்த வழக்கில் மணியகாரன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் (33), மணிகண்டன் (29), வீரமணி (27) ஆகியோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.