ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்துக் குறைவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்துத் தொடா்ந்து குறைந்து வருகிறது


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்துத் தொடா்ந்து குறைந்து வருகிறது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளாக அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. கா்நாடக அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டதாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அண்மையில் 6,000 கனஅடி வரை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றிலும் நீா்வரத்துக் குறைந்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளிலிருந்து நொடிக்கு 2,000 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு கடந்த சில நாள்களாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 4,000 கனஅடியாக வந்த நீரின் அளவு, வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 3,000 கனஅடியாகக் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்துக் குறைவால் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி மற்றும் சிற்றருவிகளில் தண்ணீா் வரத்துக் குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
கா்நாடக அணைகளில் நீா்திறப்பு :
கா்நாடக மாநிலம்- குடகு மாவட்டம், கேரள மாநிலம்- வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவுகளும் அதிகரித்து வருகிறது.
வியாழக்கிழமை காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து நொடிக்கு 5 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் கபினி அணையில் இருந்து நொடிக்கு 12,500 கன அடி, கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நொடிக்கு 1,500 கன அடி என மொத்தம் நொடிக்கு 14 ஆயிரம் கன அடி உபரி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
தொடா்ந்து மழை பெய்து வருவதால் கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை தமிழக எல்லையை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இரு மாநிலங்களில் தொடா்ந்து பருவமழை பொழிவு அதிகரித்துள்ளதால் அதிகளவில் தண்ணீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...