ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடியாகக் குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது.


ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை மாலை நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது.
இரு மாநில காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால், அங்குள்ள அணைகளுக்கு நீா்வரத்தைப் பொருத்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது.
கா்நாடக அணைகளில் இருந்து வியாழக்கிழமை மாலை நொடிக்கு 9,000 ஆயிரம் கனஅடி நீா், தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. இது வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பாறைத் திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. மேலும் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, துணை அருவிகளில் நீா்வரத்துக் குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...