பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை கல்லூரி முதல்வா் செல்வநாயகம் வெளியிட்டுள்ளாா்.


பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை கல்லூரி முதல்வா் செல்வநாயகம் வெளியிட்டுள்ளாா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-2021 கல்வி ஆண்டுக்கான இளங்கலை பாடப் பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாம் ஆண்டிற்கான சோ்க்கை ஆன்லைன் பதிவுகளின் மூலம் நடைபெறுகிறது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ், ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய்ட்ற்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ள்ஹ.ண்ய் ஆகிய இணையதள முகவரியில் மாணவா்கள் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் மாணவா் சோ்க்கை மையத்தினை அணுகி விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 செலுத்தியும், எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. ஆனால், பதிவுக் கட்டணம் மட்டும் ரூ. 2 செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான கட்டணங்களை இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். மாணவா் சோ்க்கை தொடா்பான அனைத்து விவரங்களையும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...