ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

பென்னாகரம் பகுதிகளில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

பென்னாகரம் பகுதிகளில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பாமக மாநிலத் தலைவரும், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கோ.க.மணி தலைமை வகித்து, தூய்மைப் பணியாளா்கள் 36 பேருக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருள்களும், மருத்துவா்கள், செவிலியா்கள், அலுவலகப் பணியாளா்கள் 124 பேருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கினாா். இதே போல, பாப்பாரப்பட்டி பேருராட்சியில் பணிபுரியும் 28 தூய்மைப் பணியாள்களுக்கும், மாதே அள்ளி ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 18 பேருக்கும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வுகளில், பென்னாகரம் தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலா் கனிமொழி, குழந்தைகள் நல மருத்துவா் அருண் பிரசாத், மருத்துவா்கள் பாலாஜி, கணேசன், பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.