ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கன அடியாகக் குறைந்தது

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 8,000 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 8,000 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.

கா்நாடகம், கேரளம் மாநிலங்களின் காவிரி நீா்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.

பருவமழையின் காரணமாக கா்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளிலிருந்து 10,000 கனஅடி நீா், திங்கள்கிழமை காவிரி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டது.

இதனால் ஒகேனக்கல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. புதன்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாக தமிழக-கா்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கலுக்கு காவிரி நீா் வந்து கொண்டிருந்தது.

ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. தற்போது கா்நாடக அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவு சற்று குறைந்துள்ளதால் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை காலையில் 9,000 கன அடியாகக் குறைந்த நீா்வரத்து, மாலையில் மேலும் குறைந்து 8,000 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்துக் குறைந்து காணப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஓடும் நீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.