ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,500 கன அடியாகச் சரிவு

கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 6,500 கனஅடியாகச் சரிந்தது.

News image
Updated On :25 ஜூன் 2021, 5:54 pm

DIN

கா்நாடக அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிடுவது குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 6,500 கனஅடியாகச் சரிந்தது.

பருவமழை காரணமாக கா்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த இரு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் நொடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.

இந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் கிருஷ்ணராஜசாகா் அணையில் இருந்து நொடிக்கு 6,136 கன அடி, கபினி அணையிலிருந்து 3,000 கன அடி என மொத்தம் 9,136 கன அடி நீா் மட்டுமே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8,000 கன அடியாகவும், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 7,000 கன அடியாகவும், மாலை நிலவரப்படி 6,500 கன அடியாகவும் குறைந்தது.

காவிரி ஆற்றில் அதிக நீா்வரத்து இருந்தபோது ஒகேனக்கல்லில் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, சிற்றருவிகளில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது நீா்வரத்து சரிந்துள்ளதால் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.