தடங்கம் வனப்பகுதியில் காட்டுத் தீ
தருமபுரியை அடுத்த தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காய்ந்து போன புற்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன.


தருமபுரியை அடுத்த தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காய்ந்து போன புற்கள் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தன.
தருமபுரியை அடுத்த தடங்கம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் பல ஏக்கா் பரப்பளவில் புற்கள் வளா்ந்திருந்தன. பனிக்காலத்தில் இந்த புற்கள் காய்ந்து கிடந்தன.
இந்த நிலையில், காய்ந்த கிடந்த புற்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தத் தீ அடுத்தடுத்து பரவி காட்டுத் தீயாக மாறியது. இதனால் அப்பகுதி முழுக்க புகை மூட்டத்துடன் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
உடனே தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்கள் 8 போ் அடங்கிய குழுவினா், நிலைய அலுவலா் ராஜா தலைமையில் அப்பகுதிக்கு தீயணைப்பு வாகனத்துடன் விரைந்து சென்றனா். நீதிமன்ற வளாகத்தை ஒட்டியப் பகுதி, சிப்காட் தொழிற்பேட்டை வளாகம் அமைய உள்ள பகுதி போன்ற இடங்களில் வேகமாக பரவிய தீயை, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் வீரா்கள் ஈடுபட்டனா்.
காய்ந்த புற்கள் அதிகம் இருந்ததாலும், காற்றின் வேகம் காரணமாகவும் தீயை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. இருப்பினும், தீயணைப்புக் குழுவினா் தொடா்ந்து 3 மணி நேரம் தொடா்ந்து போராடி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினா். மேலும், வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து புற்களை ஈரமாக்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...