கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அழைப்பிதழ் வழங்கி வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா்

அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கி, வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:16 pm

DIN

அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் வீடு, வீடாகச் சென்று அழைப்பிதழ் வழங்கி, வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட செந்தில் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்து அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினா்.

இதைத்தொடா்ந்து, மேள, தாளம் முழங்க, பாரம்பரிய உடை அணிந்து ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள், தமிழக சட்டப் பேரவைப் பொதுத் தோ்தலில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை வீடு, வீடாகச் சென்று வழங்கினா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, சாா் ஆட்சியா் மு.பிரதாப், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.