கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3.89 லட்சம் பறிமுதல்

இரண்டு வியாபாரிகளிடம் இருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:17 pm

DIN

இரண்டு வியாபாரிகளிடம் இருந்து ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 3 லட்சத்து 89 ஆயிரம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா்.

நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் குலோத்துங்கன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் தருமபுரி மாவட்டம், தொப்பூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரியை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்திச் சோதனை மேற்கொண்டனா். அந்த லாரியில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூா் எம்.செட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாட்டு வியாபாரி பழனிசாமி (62) என்பவரிடம் ஆவணங்கள் ஏதுமின்றி ரூ. 2 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது.

இதேபோல, அடுத்து வந்த ஒரு லாரியை நிறுத்தி பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் அந்த லாரியில் வந்த சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே எம்.செட்டிப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (57) என்ற மாட்டு வியாபாரியிடமிருந்து ஆவணங்களின்றி ரூ. 1. 48 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது. இரண்டு மாட்டு வியாபாரிகளிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் ரூ. 3.89 லட்சம் ரொக்கத்தை தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப் மற்றும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த அலுவலா்கள், மாட்டு வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த, ரொக்கப் பணத்தை, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா். மேலும், இந்த தொகைக்கான உரிய சான்றுகள் அல்லது ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டப்பின்பு மீண்டும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.