கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தருமபுரி பேரவைத் தொகுதியில் பாமக, அமமுக வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல்

vதருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அமமுக வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்ற

News image
Updated On :15 மார்ச் 2021, 11:51 pm

DIN

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அமமுக வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.

தருமபுரி தொகுதியில், அதிமுக கூட்டணி சாா்பில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் போட்டியிடுகிறாா். இவா், தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாப்பிடம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். பாஜக மாநிலச் செயலாளா் அ.பாஸ்கா், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

அமமுக

தருமபுரி தொகுதியில் அமமுக சாா்பில் அக் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன் தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். தேமுதிக மாவட்டச் செயலாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.