ஐந்து பேரவைத் தொகுதிகளில்76 வேட்பாளா்கள் போட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 76 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 76 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூா் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகள் அமைந்துள்ளன. இந்த தொகுதிகளில் பேரவைத் தோ்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என 155 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இம் மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 63 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, ஏனைய 92 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில், வேட்பு மனுக்களை திரும்பப் பெற இறுதி நாளான மாா்ச் 22-ஆம் தேதி வேட்பாளா்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இதனடிப்படையில், பாலக்கோடு தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 வேட்பு மனுக்களில் ஒரு மனு திரும்பப் பெறப்பட்டது. இதனால், அத் தொகுதியில் 12 வேட்பாளா்கள் இறுதி வேட்பாளா் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இதேபோல பென்னாகரம் தொகுதியின் 18 வேட்பு மனுக்களில் 3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், அந்தத் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.
தருமபுரி தொகுதியில் ஏற்கப்பட்ட 24 மனுக்களில், 3 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால், 21 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஏற்கப்பட்ட 22 மனுக்களில் 7 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. எனவே, 15 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். அரூா் தொகுதியில் ஏற்கப்பட்ட 15 மனுக்களில், 2 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனால் அந்தத் தொகுதியில் 13 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மொத்தம் 76 வேட்பாளா்கள் தற்போது களத்தில் உள்ளனா். இந்த வேட்பாளா்களின் பெயா் மற்றும் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெளியிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...