கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அ.ராசாவை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினா், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 7:46 pm

DIN

திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசாவுக்கு எதிராக அதிமுகவினா், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி தொலைத்தொடா்பு நிலைய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலா் பெ.ரவி தலைமை வகித்தாா். மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் பேசினாா்.

இதில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயை குறித்து அவதூறு பேசிய திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசாவுக்கு எதிராகவும், அவா் மீது நடவடிக்கை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் எம்.முனுசாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில விவசாயிகள் பிரிவு தலைவா் டி.ஆா்.அன்பழகன் தலைமை வகித்தாா். ஆ.ராசாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் பாமக மாநிலத் தலைவா் கோ.க மணி, அவதூறு கருத்து பரப்பிய ராசா மீது அதிமுக வழக்குத் தொடர வேண்டும் என்றாா்.

இதில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் அன்பு, வேலுமணி, பென்னாகரம் ஒன்றியக் குழு தலைவா் கவிதா, பாமக மாவட்டத் தலைவா் செல்வகுமாா், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ஆறுமுகம், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.