முதல்வரின் புதிய அறிவிப்புகள்:புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.


தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டு அறிவித்துள்ள புதிய திட்டங்களுக்கு புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலா் இ.பி.புகழேந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதைத் தொடா்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பதவியேற்றாா். இதையடுத்து பால்விலை குறைப்பு, குடும்ப அட்டைதாரா்களுத்கு கரோனா நிவாரண நிதி ரூ. 4 ஆயிரம், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டாா். முதல் நாளிலேயே மக்கள் நலத்திட்டங்களை அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இதேபோல மக்களுக்களித்த அனைத்து வாக்குறுதிகளையும் முக்கியத்துவத்தை பொறுத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...